கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயிலில் காருண்ய தீர்த்தம் உள்ளது ஒரு முறை சிவன் அம்பிகையிடம் இத்தலத்தின் பெருமைகளை எடுத்துக் கூறினார். அதைக்கேட்ட அம்பிகை ஆனந்தக்கண்ணீர் வடிக்க அது ஒரு குளமாக உருவானது அந்த காருண்ய தீர்த்தத்தில் சித்திரை முதல் நாள் தீர்த்தவாரி நடப்பது விசேஷம்.