பெரியகுளத்தில் நாமத்வார் பிரார்த்தனை மைய பூமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2017 02:05
பெரியகுளம்: பெரியகுளத்தில் நாமத்வார் பிரார்த்தனை மையம் பூமிபூஜையை முரளீதரசுவாமி துவக்கி வைத்தார். பெரியகுளம் தெற்குஅக்ரஹாரத்தில் நாமத்வார் பிரார்த்தனை மையம் கட்டுவதற்கு முரளீதரசுவாமி பூமிபூஜை செய்தார்.அவர் பேசுகையில், ஸ்ரீ பகவத் ராமானுஜர், அட்சயதிரிதியை, ஸ்ரீ ஆதிசங்கர் ஜெயந்தி, சேங்கனூர் பெரியவாச்சான்பிள்ளை மற்றும் குரு மகிமை குறித்து பேசினார். ஹரே ராம மஹாமந்திரம் கூட்டு பிரார்த்தனை நடந்தது. தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பக்தர்கள் வந்திருந்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ், காசியம்மாள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.