பதிவு செய்த நாள்
04
மே
2017
02:05
ஈரோடு: காவிரிக்கரை முனியப்பசாமி கோவில் பொங்கல் திருவிழாவில், பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, கருங்கல்பாளையம், காவிரி ஆற்றின் கரையில், காவல் தெய்வமாக உள்ள முனியப்பசாமி கோவிலில், 45வது ஆண்டு பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. இதில், நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் ஊர்வலம் வந்தனர். சோழீஸ்வரர் கோவில் அருகே, ஆற்றங்கரையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், ராகவேந்திரர் கோவில் வீதி, முனியப்பன் வீதி வழியாக கோவிலுக்கு வந்தது. பின் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மதியம் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தன. இன்று மறுபூஜை, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.