பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று காப்பு அணிதல் விழா நடந்தது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா, கடந்த, 1ல் துவங்கியது. நாளை, ஐம்பேரும் மூர்த்திகள் அறுபத்து மூவருக்கு அருட்காட்சி அளித்தல், திருவீதி உலா நடக்கிறது. நேற்று காலை, சங்கமேஸ்வரர் சன்னதி முன், பவானி சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில், அறுபத்து மூவர் பல்லக்கு தாங்குபவர்களுக்கு, காப்பு அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சிவனடியார் திருக்கூட்டத்தினர் மற்றும் பக்தர்கள், 150க்கும் மேற்பட்டோர் கங்கணம் கட்டிக்கொண்டனர். பஞ்சமூர்த்திகள் புறப்பாட்டின் போது, அறுபத்து மூவர் பெருமக்கள், 28 பல்லக்குகளில் திருவீதி உலா வருவர். கங்கணம் கட்டிய பக்தர்கள் பல்லக்குகளை தோள்களில் தாங்கி வருவர்.