Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரியகோவில் சித்திரை ... கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல் அடுக்கினால் வீடு கட்டலாம்: மீனாட்சி கோயிலில் வினோதம்
எழுத்தின் அளவு:
கல் அடுக்கினால் வீடு கட்டலாம்: மீனாட்சி கோயிலில் வினோதம்

பதிவு செய்த நாள்

05 மே
2017
11:05

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புரனமைப்பு பணி நடக்கிறது. இதற்காக செதுக்கப்பட்ட புதிய கற்துாண்கள் மீது, கற்களை அடுக்கி வழிபட்டால் வீடு கட்டலாம் என்ற வினோத நம்பிக்கை பக்தர்களிடையே பரவுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளம் மேற்கூரைப் பகுதிகளில், சிதிலமடைந்த கற்துாண்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, மூன்று கோடி ரூபாயில் புரனமைக்கும் பணி நடக்கிறது. புதிய கற்துாண்கள் பதிக்கும் பணியில், தஞ்சாவூர் ஸ்தபதிகள் பல மாதங்களாக ஈடுபட்டுள்ளனர். புதிய கற்துாண்கள், பழைய திருக்கல்யாண மண்டபம் எதிரே வைக்கப்பட்டுள்ளன.

புதிய கற்துாண்கள் மீது கற்களை அடுக்கி வழிபட்டால் வீடு கட்டும் யோகம் கிடைக்கும் என பக்தர்களிடையே நம்பிக்கை பரவி வருகிறது. சுவாமி சன்னதியில் வழிபாடு நடத்தி விட்டு, பழைய திருக்கல்யாணம் மண்டபம் வழியாக வரும் பக்தர்கள், கற்துாண்கள் மீது சிறிய கற்களை அடுக்கி வைத்து நீண்ட நேரம் வழிபடுகின்றனர். இதற்காக சிலர், சிறிய கற்களை வெளியில் இருந்தும் கொண்டு வருகின்றனர். போலீசாரின் தீவிர சோதனையில் இருந்தும் கல் தப்பி விடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலா தோரணம்: தேனி மாவட்டம் நாச்சியார்புரம் பக்தர் பாக்கியலட்சுமி கூறியதாவது: திருப்பதி கோயிலில் தரிசனம் செய்து திரும்புவோர்,  சிலா தோரணம் என்ற பகுதியில் பாறைகளில் கற்களை அடுக்கி வைப்பதை பார்த்தேன்; கற்களை அடுக்கி வழிபட்டால், கேட்ட வரம் கிடைக்கும் என்றனர். அதேபோல மீனாட்சி அம்மன் கோயில் பழைய திருக்கல்யாண மண்டபம் எதிரே, கற்துாண்கள் மீது கற்களை அடுக்கி சிலர் வழிபடுவதை பார்த்தேன்; இதனால் நானும்  வழிபட்டேன், என்றார்.

அர்ச்சகர் கருத்து: மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர் ஒருவர் கூறியதாவது: இக்கோயிலுக்குள் நுழைவதே பெரும் பாக்கியம்தான். அம்மன், சுவாமியை வழிபட்டு சென்றாலே போதும். சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு நிலவும் இறை நம்பிக்கை. அதை கொடு, இதை கொடு என வேண்டுவது கூடாது. கோயிலில் அமைதியாக வழிபாடு நடத்தி தியானம் செய்ய வேண்டும். கற்துாண்கள் மீது கற்களை வைத்து வழிபடுவது அவரவர் நம்பிக்கையாக இருந்தாலும், இதுபோன்ற வினோதங்களை பக்தர்கள் தவிர்க்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar