Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூரில் ரூ.38.50 லட்சத்தில் ... அலங்காநல்லூர் முத்தாலம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லியம்மன் கோவிலில் 10 நாள் படையல் திருவிழா
எழுத்தின் அளவு:
செல்லியம்மன் கோவிலில் 10 நாள் படையல் திருவிழா

பதிவு செய்த நாள்

05 மே
2017
12:05

ஊத்துக்கோட்டை : கிராம தேவதை செல்லியம்மன் கோவிலில், 10 படையல் திருவிழா, கடந்த, 2ம் தேதி கோலாகலமாக துவங்கியது. எல்லாபுரம் ஒன்றியம், லட்சிவாக்கம் கிராமத்தில் உள்ளது செல்லியம்மன் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் படையல் திருவிழா நடைபெறுவது வழக்கம். பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழா, கடந்த, 2ம் தேதி, காலை, 8:00 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. காலை, 11:00 மணிக்கு, செங்காளம்மனுக்கு ஊர் கூடி பொங்கல் வைத்து, கத்தரி பூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு சக்தி அம்மனுக்கு கும்பம் படைத்து வழிபாடு நடந்தது. இரவு, 9:00 மணிக்கு, கோ பூஜை, முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து புதிதாக வண்ணம் தீட்டிய செல்லி அம்மன், பொன்னியம்மன் கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்தது. நேற்று முன்தினம், காலை, 9:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும், மதியம், 2:00 மணிக்கு பொங்கலிட்டு, காப்பு கட்டும் விழா நடந்தது. நேற்று காலை, வேப்பிலை சுற்றப் பட்ட கரகம் ஊர் முழுவதும் சுற்றி எடுத்து வரப்பட்டது. வரும், 9ம் தேதி வரை கரகம் ஒவ்வொரு நாளும் சுற்றி வரும். வரும், 10ம் தேதி, இரவு, 7:00 மணிக்கு, செல்லியம்மன் பூரண அலங்காரத்துடன் கோவிலில் இருந்து புறப்பட்டு, கிராம மண்ணடியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இரவு தெருக்கூத்து நடைபெறும். மறுநாள், 11ம் தேதி, காலை, 8:00 மணிக்கு படையல் திருவிழா நடைபெறும். இரவு, 7:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar