தேவிபட்டினம் அரியமான் கடற்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2017 01:05
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அழகன்குளம் அருகே அரியமான் கடற்கரை ரோட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. அனுக்ஞை பூஜைகள், விக்கேனஸ்வரர், மூலவர் வழிபாடு நடைபெற்று 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
கோயிலில் உள்ள அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின் மழை வேண்டி சிறப்பு யாகமும், 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. வருஷாபிஷேக சிறப்பு பூஜைகளை மதுரை மீனாட்சியம்மன் கோயில் சரவணபட்டர் செய்திருந்தார்.