ராமநாதபுரம்: ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான மாரியம்மன் கோயிலில் மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் வருண யாகம் நடந்தது. மதுரை சுரேஷ்சிவன், தலைமையில் தேவாரம், திருவாசக பாடல்கள் பாடினர். பின் கோயில் பிராகாரத்தில் வருண யாகம் நடந்தது.கோயில் நிர்வாக தலைவர் ராமசாமி, செந்திவேல், அர்ச்சகர் எம்.ஹரி கிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.