ஒரு கப்பல் துறைமுகத்தை விட்டு கிளம்பத் தயாரானது. பயணிகளை வழி அனுப்ப வந்த உறவினர்கள் கையசைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் கண்களில் கண்ணீர்...! கப்பலில் சென்ற ஒரு வியாபாரிக்கு மட்டும் உறவுகள் யாருமில்லை. ஏக்கத்தோடு மற்றவர்களை வழியனுப்ப வந்தவர்களை பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு சிறுவன் அங்கே நின்றான். அவனை அழைத்து, கையில் நூறு ரூபாயைக் கொடுத்து, நான் கப்பலில் ஏறும் முன் நீயும் இவர்களைப் போல், என்னைப் பார்த்து கையசைப்பாயா? என்றார். சிறுவனும் தலையசைத்தான். வாங்கிய பணத்துக்காக போலிச் சிரிப்புடன் கையசைத்தான். உலகம் இது போன்ற போலி உறவுகளுக்குத் தான் மரியாதை செய்கிறது. உண்மையில், ஆண்டவர் மட்டுமே நமக்கு நிஜமான உறவினர். அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். பிறப்பில் இருந்து மரணம் வரைக்கு மட்டுமல்ல, மரணத்துக்குப் பிறகும் அவர் முன்னிலையில் நாம் நிற்கிறோம். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதும் இல்லை, என்கிறார்.அந்த நிஜ உறவினரை மட்டும் நம்புபவர்கள், உலக உறவு பற்றி கவலைப்படத் தேவையில்லை.