நபிகள் நாயகம் தன் வீட்டில் நண்பர்களுடன் அமர்ந்திருந்த போது, சிலர் கம்பளி போர்த்தி, வாள் ஏந்தி வந்தனர். அவர்களில் பெரும்பாலோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய வறுமைநிலை கண்ட நபிகளின் முகம் வாடியது. தொழுகைக்குப் பிறகு அவர் உரை நிகழ்த்தினார். மக்கள் இறைவழியில் தர்மம் செய்ய வேண்டும். பொன், வெள்ளிக்காசுகளையும், துணிமணிகளையும் வழங்க வேண்டும். கோதுமை ஒரு மரக்காலும் பேரீச்சம்பழம் ஒரு மரக்காலும் வழங்க வேண்டும். ஒருவரிடம் பேரீச்சம் பழத்தின் ஒரு பாதித்துண்டு இருந்தால், அதையாவது அவர் கொடுத்து விடட்டும், என்றார். இதைக் கேட்ட மக்கள் தர்மம் செய்ய ஆரம்பித்தார்கள். தானியங்கள், துணிமணிகள் கொண்ட இரு குவியல்கள் தர்மம் செய்யப்பட்டது. இது கண்டு நபிகளின் முகம் பிரகாசித்தது. பின்னர் நபிகள், ஒருவர் இஸ்லாத்தில் நல்லதொரு வழிமுறையைச் செயல்படுத்தினால் அதற்கான கூலி அவருக்குக் கிடைக்கும். தீய வழி முறை ஒன்றை நடைமுறைப்படுத்தினால், அதற்கான பாவம் அவனைச் சேரும், என்றார்.