ஒரு விவசாயி தன் நிலத்தில் சோளம் பயிரிட்டிருந்தார். அங்கு வந்த காகங்கள் அவற்றை தின்றன. விவசாயி ஒரு கிளியை வளர்த்தார். அது காகங்களுடன் சேர்ந்து விளையாடும். காகங்களைக் கொல்ல, விவசாயி துப்பாக்கியுடன் சென்றார். அவற்றை சுடும் போது, ஒரு குண்டு தவறுதலாக கிளி மீது பாய்ந்து இறக்கை முறிந்து விட்டது. காயம்பட்ட கிளிக்கு விவசாயி மருந்து போட்டார். அங்கு வந்த விவசாயியின் மகனும், அந்தக் கிளியும் நண்பர்கள். கிளியே! உனக்கு என்னாச்சு என்று கேட்டான். கெட்ட சிநேகிதம், கெட்ட சிநேகிதம், என்று அது பதிலளித்தது. இந்தக்கதையின்படி திருட வரும் காகங்களை, கெட்டவர்களுடன் ஒப்பிடப்படுகிறது. அவர்களுடன் சேர்ந்தததால், நல்லவர்களுடன் ஒப்பிடப்படும் கிளிக்கு காயம் ஏற்பட்டது. நல்லவர்களுடன் மட்டும் உறவு வேண்டும் என்பது இந்தக்கதை உணர்த்தும் பாடம்.துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே. தீயோருடைய வழியில் நடவாதே என்ற வசனம் பைபிளில் உள்ளது.