பதிவு செய்த நாள்
08
மே
2017
03:05
தாரமங்கலம்: புதிதாக கோவில் கட்டுபவர்கள், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் எதிரே, பயன்படுத்தாமல் கிடக்கும் கற்தூண் சிற்பங்களை, அச்சு எடுத்துச் சென்று, ரெடிமேட் தூண்கள்
அமைக்கின்றனர்.
தாரமங்கலத்தில், கைலாசநாதர் கோவிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். கோவில்
கட்டிய காலத்தில், பயன்படுத்த முடியாத கற்தூண்களை, அங்கேயே போட்டு வைத்துள்ளனர். அவை, நாளடைவில் மண் குவியலில் மறைக்கப்பட்டு, புதையுண்டு போனது. சமீபத்தில்,
கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் சீரமைத்தபோது, மண்ணில் புதைந்திருந்த கற்தூண்கள் பல கண்டெடுக்கப்பட்டன. அவற்றை வெளியில் எடுத்து, கோவில் நிர்வாகத்தினர் குவித்து
வைத்துள்ளனர். அவற்றை, சுற்றுலாப் பயணிகள் பார்த்துச் செல்கின்றனர். ஆனால், சமீப காலமாக, புதிதாக கோவில் கட்டுபவர்கள், அரசியல் மாநாடு, திருமணம் ஆகிய விழாக்களில்,
வரவேற்பு வளைவு அமைப்பவர்கள் பலர், அங்குள்ள கலை நயமிக்க கற்தூண்கள் மீது, மெழுகு காய்ச்சி ஊற்றி, அச்சு எடுத்துச் சென்று, ரெடிமேட் தூண்களை உருவாக்கி வருகின்றனர்.