Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரெங்கமலையில் சித்ரா பவுர்ணமி பாலாற்றில் இறங்கிய கள்ளழகர்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2017
02:05

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, சித்திரகுப்தர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் முக்கிய கோவில்களில் ஒன்றான, சித்திர குப்தர் கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். இதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். காலை, 5:30 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். கோவில் வெளிபுறத்தில் இருபுறமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் பாதுகாப்புக்காக இங்கிருந்து போலீசார் நேற்று அனுப்பப்பட்டதால், இந்த திருவிழாவிற்கு பாதுகாப்பு குறைவாக இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த, போதிய பாதுகாப்பு போலீசார் இல்லாததால் பக்தர்கள் முண்டியடித்து சென்றனர்.

வசதி குறைவு:  பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யாததால் பக்தர்கள் அவதியுற்றனர். சுட்டெரிக்கும், கத்திரி வெயிலில் நின்ற, பக்தர்களுக்கு போதுமான அளவு, நிழல் தரும் பந்தல் அமைக்கவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க மொபைல் டாய்லட் வைக்கவில்லை. பாதுகாப்பு போலீசார் கோவில் அருகில் மட்டுமே இருந்தார்களே தவிர, பக்தர்கள் நிற்கும் வரிசையின் கடைசி வரை பாதுகாப்பு அளிக்கவில்லை. இயற்கை உபாதைக்காக ஆண்கள் ஒதுக்குப்புறமாக இடங்களை தேடிச்சென்றனர்.

நிர்வாகம் மெத்தனம்: பெண்களின் நிலையோ பரிதாபமாக இருந்தது. காஞ்சிபுரம் உள்ள கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேக விழாக்களின், பக்தர்களின் வசதிக்காக, நகராட்சி நிர்வாகம் சார்பில், மொபைல் டாய்லெட் அமைக்கப்படும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியின் போது, இக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்யும் நிலையில், பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதில், கோவில் நிர்வாகம் மெத்தனமாக இருந்தது பக்தர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர் கூட வழங்கவில்லை. தனியார் அமைப்பு மற்றும் பக்தர்கள் தான் வாட்டர் பாக்கெட், மோர், அன்னதானம் வழங்கினர். இயற்கை உபாதைகளை கழிக்க, மொபைல் டாய்லெட் இல்லாததால், பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறைக்கு சென்று வர வேண்டிய நிலை இருந்தது. குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படவில்லை. பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில், தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர சம்பந்தப்பட்ட துறை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோமதீஸ்வரி குமரவேல், வியாசர்பாடி, சென்னை

பேரக்குழந்தைகளுடன், காலை, 10:00 மணிக்கு கோவிலுக்கு வந்தேன். அப்போது, கிழக்கு ராஜ வீதியில் உள்ள, பெட்ரோல் பங்க் வரை பக்தர்களின் வரிசை இருந்தது. கோவிலுக்கு செல்வதால், காலணிகளை காரிலேயே வைத்துவிட்டு வந்து விட்டோம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், வெறும் கால்களுடன் குழந்தைகளால் நிற்க முடியவில்லை. கோவில் அருகில் மட்டுமே, பந்தல் அமைத்திருந்தனர். தெரு முழுவதும் பந்தல் அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சுவாமி தரிசனம் செய்ய பகல், 1:30 மணி ஆகிவிட்டது.
வசந்தா தணிகாசலம், திருமுல்லைவாயல், சென்னை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar