வேடசந்துார், கல்வார்பட்டி ஊராட்சியின் வட பகுதியில் மாவட்ட எல்லையாக உள்ள ரெங்கமலை உள்ளது. இதன் அடிவாரப்பகுதி யில், கல்வார்பட்டி முன்னாள் தலைவர் ரமேஷ் தலைமையில் மல்லீஸ்வரன் கோயில் ஒன்றை புதிதாக கட்டியுள்ளனர். அங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் 16 கி.மீ., சுற்றளவு கொண்ட ரங்கமலையை சுற்றி நடைபயணமாக வலம் வருவர். பிறகு புதிதாக கட்டிய மல்லீஸ்வரன் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக நடைபெறும். இங்கு, ஆயிரக்கணக்கான மக்களுக்கு நேற்று அன்னதானம் நடந்தது. ரெங்கமலையை சுற்றி கிரிவலம்வர வனத்துறையினர் பாதை அமைத்து தந்தால் வசதியாக இருக்கும், என பக்தர்கள் தெரிவித்தனர்.