சாத்துார், சாத்துாரில் வெங்கடாஜலபதி கள்ளழகராக பச்சைப்பட்டு உடுத்தி வைப்பாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலில் சித்ராபவுர்ணமி விழாவையொட்டி, பெரியகொல்லபட்டி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக சுவாமி, கள்ளழகராக பச்சைப்பட்டுடுத்தி புறப்பட்டு வைப்பாற்றில் இறங்கி, அங்கு மருத்துவ குல சங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த திருக்கண்ணில் வீற்றிருந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கையை ஏற்றுக்கொண்டார். இதன் பின் பெரிய கொல்லபட்டி சென்று அங்கு நான்கு ரதவீதி வழியாக வலம் வந்து ஜமீன் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நாளை மறுநாள்கருடவாகனத்தில் எழுந்தருளும் சுவாமி திருக்கோயிலை வந்தடைவார். ஏற்பாடுகளை பெரியகொல்லபட்டி கிராமமக்கள் சார்பில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.