எழுமலை: எழுமலையில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக திருவேங்கடப் பெருமாளும், சுப்பிரமணியரும் எதிர்சேவை நடத்தும் திருவிழா நேற்று நடந்தது. சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது அணிவித்த மாலை கொண்டு வந்து எழுமலை திருவேங்கடப் பெருமாளுக்கு அணிவித்த பின் கோயிலில் இருந்து சுவாமி ஊர்வலம் புறப்பட்டது. இதே நேரத்தில் மாதாந்திர சுப்பிரமணியசுவாமி கோயிலில் இருந்து சுப்பிரமணியர் புறப்பட்டு எழுமலையில் நகர்வலம் வந்து இருவரும் அருள்பாலித்தனர். நேற்று காலையில் திருவேங்கடப் பெருமாளும் சுப்பிரமணியரும் இணைந்து கணக்கன்குளம் கண்மாய் அருகில் எதிர்சேவை நடந்தது. பின்னர் கோயிலுக்கு திரும்பினர்.