புதியதோர் உலகம் படைக்க ஒரு நிமிடம் அமைதி காத்து சபதம் ஏற்போம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2011 11:11
ஜெகத்குரு மகாமகரிஷி பரஞ்ஜோதியார் உலக அமைதி தினச் செய்தி: உலக அமைதிக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரத் தியாகிகள்- அமைதிப்பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள சான்றோர்கள்- போரற்ற உலகை படைக்க விரும்பும் பெருமக்கள் அனைவருக்கும் பரிபூரண நல்லாசிகள். இன்று நிறைமதி நன்னாள். நவம்பர் திங்களின் முழுநிலவுப் பொன்னாள். இருள் அகன்று பூரணப் பிரகாசம் பொழிவதைப் போல அல்லவை தேய்ந்து அறம் பெருக நல்லவையே நாளும் வளர ஏழ்மையற்ற, வறுமையற்ற, அறியாமையற்ற, ஊழலற்ற, பிணியின்றி நனி சிறக்க ஒரு நிமிடம் அமைதி காத்து புதியதோர் உலகம் படைக்க சபதம் மேற்கொள்வோம். போரில்லா உலகம் படைக்க புனிதப்பணி மேற்கொள்வோம் வாரீர்! வாரீர்! இவ்வனைத்து நோக்கங்களும் நிறைவேற இந்நாளில் முற்பகல் 11.11 மணிக்கு உலகம் முழுவதும் இவ்வேள்வியில் பங்கு கொண்டு ஓரு நிமிடம் அமைதி காக்கும் அனைவருக்கும் பரிபூரண நல்லாசிகள். ஓன்று படுவோம்! ஓன்று படுத்துவோம்! வெற்றி பெறுவோம்! அன்னை பூமி நீடூழி வாழ்க! வளர்க மெய்ஞானம்! வாழ்க சமாதானம்! உலக நலம் காப்போம்! உய்யும் வழி காண்போம்!