கீழக்கரை, ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் மழைவேண்டி வருண ஜெப வேள்வி நடந்தது. மூலவர் மங்களநாதர் சன்னதி முன்புறம் உள்ள நந்திக்கு 4 அடி உயரத்தில் தொட்டி அமைக்கப்பட்டு, அதில் நந்தி சிலை மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றப்பட்டது. ருத்ர, வருண ஜெபங்களை சிவாச்சாரியார் பாடினார். கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு, மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பூஜைகளை மங்களேஸ்வ குருக்கள் செய்தார். சமஸ்தான திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் ஸ்ரீதர், த.முனியாண்டி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.