விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதுார் ஏரிக்கரை வரசித்தி விநாயகர் மற்றும் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வர கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை துவார பூஜை, கலச பூஜை, நான்காம் கால ேஹாமம், நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, மந்த்ரபுஷ்பம், யாத்ரா தானம் நடந்தது. காலை 8:30 மணிக்கு விமானம் மற்றும் மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் தர்மகத்தா டாக்டர் ராஜாராமன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.