மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆதிகுருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை பதினோறாம் நாள் விழாவில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜைப் பெருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இவ்வாண்டு கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி 11 நாட்கள் நடந்தது.
இதில் பதினோறாம் திருநாள் விழாவில் குரு ஞானசம்பந்தர் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி விமர்சையாக கொண்டாடப்பட்டது. காலையில் ஞானபுரீஸ்வரர் கோயிலில் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மதியம் மகேஸ்வரபூஜை நடைபெற்றது. மாலை திருச் சி காசீப்மகேஷ் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. தொடர்ந்து ஆதீனம் 26 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சொக்கநாத பெருமானை வழிபட்டு விட்டு ஞானபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தர் திருவுருவச்சிலைக்கு குருமகா சன்னி தானம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் குருமுதல்வர் திருவுருவச்சிலையுடன் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. நான்கு வீதிகளிலும் குருமகா ச ன்னிதானத்ணீற்கு பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிகாலை ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஞானகொலுக்காட்சி எழுந்தருளி பக்தர்களுக்கு அரு ளாசி வழங்கினார். ஆதீன இளைய சந்நிதானம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்தர் சுவாமிகள், திருப்பனந்தாள், காசிமடத்து இளவரசு திருஞானசம்பந்த தம்பிரான், திருநள்ளாறு கந்தசாமி தம்பிரான், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், விஸ்வ இந்து பரிஷத் வாஞ்சிநாதன் உ ட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.