பதிவு செய்த நாள்
19
மே
2017
01:05
பொள்ளாச்சி: குருநல்லிபாளையத்தில், ஸ்ரீகாலபைரவர் திருக்கோயிலில் இரண்டாம் ஆண்டு விழா நேற்று நடந்தது.பொள்ளாச்சி அடுத்துள்ள வடசித்துார் - குருநல்லிபாளையத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீகாலபைரவர் திருக்கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில், சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமானோர் பங்கேற்று, பைரவரை வழிபடுகின்றனர். நேற்று, மாதாந்திர தேய்பிறை அஷ்டமி பூஜையும், இரண்டாம் ஆண்டு விழாவும் நடந்தது. காலை,9.00 மணி அளவில், சேத்துமடை காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில் தீர்த்த விநாயகர், சிவனுக்கு செலுத்தப்பட்டு தீர்த்த தரிசனம் நடந்தது. மாலை, 3.00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கி நடந்தது. தொடர்ந்து, 5.00 மணிக்கு தேய்பிறை அஷ்டமி பூஜைகள் துவங்கி நடந்தது. பொள்ளாச்சி, நெகமம், வடசித்துார் சுற்றுப்பகுதி பொதுமக்கள் விழாவிலும், அஷ்டமி பூஜையிலும் பங்கேற்று ஸ்ரீகாலபைரவரை வழிபட்டனர்.