தேவகோட்டை: தேவகோட்டை கல்லாம்பிரம்பு காளியம்மன் , முனீஸ்வரர் கோயில் 36 வது ஆண்டு சித்திரை உற்சவம் கணபதி ேஹாமம் காப்பு கட்டுதலுடன் துவ்ங்கியது. மாவடி கருப்பர் கோயிலிலிருந்து அக்கினி கொப்பரை வளர்த்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம், சக்திகிரகம்,வேல்காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். .இளைஞர் மன்ற த்தின் சார்பில் அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தினர்.