பதிவு செய்த நாள்
19
மே
2017
01:05
ஆர்.கே.பேட்டை;செல்லாத்துார் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 18 நாட்களுக்கும், இந்த புராணம் தொடரும். ஆர்.கே.பேட்டை அடுத்த, செல்லாத்துார் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 10:00 மணிக்கு, புதிய கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அதை தொடர்ந்து, மகாபாரத சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. வரும், 25ம் தேதி, வியாழக்கிழமை, பகாசூரன் கும்பம் படைக்கப்படுகிறது. அன்றைய தினம் துவங்கி, தினசரி இரவு தெருக்கூத்து நடைபெறும். இதற்காக, புதிய தெருக்கூத்து கலையரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.ஜூன் 4ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், அன்று மாலை அக்னி பிரவேசமும் நடக்கிறது. இதற்காக, திரளான பக்தர்கள் காப்பு கட்டி, விரதத்தை துவக்கி உள்ளனர்.நேற்று காலை துவங்கிய மகாபாரதம் சொற்பொழிவு, வரும், 5ம் தேதி, தர்மராஜா பட்டாபிஷேகம் வரை, 18 நாட்களுக்கும் தொடர்ந்து நிகழ்த்தப்படும்.