பதிவு செய்த நாள்
19
மே
2017
06:05
விருத்தாசலம்: விருத்தாசலம் சபிதா மகாலில் சீதா கல்யாண உற்சவம் துவங்கியது. விருத்தாசலம் நாம சங்கீர்த்தன பக்த ஜன சபா சார்பில் சீதா கல்யாண உற்சவம், சேலம் ரோடு சபிதா மகாலில் (19ம் தேதி) துவங்கி, 21ம் தேதி முடிகிறது. இதையொட்டி, மாலை 4:30 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, வசந்த மாதவ கலசம் ஆவாஹனம், தோடயமங்களம் குருகீர்த்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நாளை காலை 6:30 மணிக்கு துவங்கி உஞ்சவ்ருத்தி, தோடயமங்களம் குருகீர்த்தனை, தரங்கம், பஞ்சபதி, கணேசாதி தியானங்கள், அபங்க பஜனை, ஜானவாசம் (மாப்பிள்ளை அழைப்பு) நிகழ்ச்சிகளும்; இரவு 9:00 மணிக்கு மேல் நள்ளிரவு 1:00 மணி வரை பூஜை, திவ்யநாம சங்கீர்த்தனம், டோலோத்சவம் நிகழ்ச்சி நடக்கிறது.
21ம் தேதி காலை 7:00 மணியளவில் உஞ்சவ்ருத்தி, சீதா கல்யாணம், பாகவதர்களை கவுரவித்தல், பகல் 11:40 மணியளவில் சீதா கல்யாண உற்சவம் (மாங்கல்ய தாரணம்), பிற்பகல் 12:30 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை வசந்த கேளிக்கை, பவ்வளிம்பு உற்சவம், ஆஞ்சநேய உற்சவம், மங்கள ஆரத்தி நிகழ்ச்சிகள் நடக்கிறது.