பதிவு செய்த நாள்
22
மே
2017
04:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மழை வேண்டி வருண ஜெபம் நடந்தது. திருவண்ணாமலையில், கடும் வறட்சியால் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பயிர் சாகுபடி செய்யமுடியாமல் விவசாயிகள் கடும் பாதிப்புக்கும் ஆளாகி உள்ளனர். இதையடுத்து, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மழை வேண்டி பிரம்மதீர்த்த குளத்தில், ரமேஷ் குருக்கள் தலைமையில் வருண ஜெபம் நடந்தது.
இதையொட்டி, பிரம்ம தீர்த்த குளக்கரையில் யாக குண்டம் அமைத்து வருண யாகம் நடந்தது. தொடர்ந்து பிரம்ம தீர்த்த குளத்திற்குள், 30க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் இறங்கி, காலை, 7:00 மணி முதல், 11:00 மணிவரை தொடர்ந்து வருண ஜெபம் செய்தனர். பின், 1,008 சங்காபிேஷகம் நடந்தது. மேலும், வீணை இசை கலைஞர் கணேஷ், மழை வேண்டி, ஹம்சவர்த்தினி ராகம் இசைத்து, பிரார்த்தனை செய்தார். கோவில் இணை ஆணையர் ஜெகந்நாதன், பழனிசாமி அணி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.