சிருங்கேரி சாரதா பீடாதிபதிக்கு நெல்லையில் நாளை வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2017 03:05
திருநெல்வேலி: சிருங்கேரி சாரதா பீடாதிபதி நாளை நெல்லை வருகிறார். சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதீ தீர்த்த மகா சன்னிதானம் மற்றும் விதுரசேகர பாரதி சன்னிதானம் ஆகியோர் நாளை 23ம் தேதி மாலையில் நெல்லை வருகின்றனர். அவர்களுக்கு நெல்லை, கங்கைகொண்டானில் சிறப்பான வரவேற்பளிக்கப்படுகிறது. 27ம் தேதி வரையிலும் நெல்லையப்பர் கோயில், மேலத்திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு செல்கிறார். ஜூன் முதல் தேதி காலையில் நடக்க உள்ள கங்கைகொண்டான் ஆனந்தவல்லி கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகத்திலும் பங்கேற்கிறார்.