சிதம்பரம்: கொண்டல் குமார சுப்ரமணிய சுவாமி கோவிலில் அப்பர் ஊழவாரப் பணி மன்றத்தினர் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
சிதம்பரம் அடுத்த கொண்டல் கிராமத்தில் எழுந்திருளியுள்ள குமார சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிதம்பரம் அப்பர் உழவாரப் பணி மன்றம் சார்பில் கோவில் சுத்தம் செய்யும் உழவாரப்பணிகள் நடந்தது. இதனையொட்டி மன்ற நிர்வாகி சிவனாடியார் காளிதாஸ் தலைமையில் சேகர், சுப்ரமணியன், முத்தையன், ஜோதிமகாலிங்கம், அமுதா, மாலா கண்ணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கோவில் வளாகத்தில் உள்ள புள், முள் முட்புதர்களை வெட்டி எடுத்து அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். பின்னர் கோவில் சன்னதிகளை ஒட்டடை அடித்தும், தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். இதனைதொடர்ந்து குமார சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் சிவனடியார்கள் கோவில் சன்னதியில் சிவனடியார்களின் சிவபூஜை நடைப்பெற்று, திருமுறைகள் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.