பதிவு செய்த நாள்
24
மே
2017
01:05
ஆர்.கே.பேட்டை : கங்கையம்மன் மற்றும் கொள்ளபுரியம்மன் கோவில்களில் நடந்து வரும் ஜாத்திரை விழாவில், நேற்று இரவு, விடிய விடிய சுவாமி ஊர்வலம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
பள்ளிப்பட்டு, கொள்ளாபுரியம்மன் கோவில் மற்றும் கங்கையம்மன் கோவில்களில்ஜாத்திரை விழா நடந்து வருகிறது. பூங்கரகத்துடன் துவங்கிய விழாவில், நேற்று, காலை 10:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்புஅபிஷேகமும், அலங்காரமும், அதை தொடர்ந்து கூழ் வார்த்தலும் நடந்தது.
இரவு 7:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் நாதஸ்வர கச்சேரி நடந்தது. 9:00 மணிக்கு, கொள்ளாபுரியம்மன் புஷ்ப பல்லக்கில்வீதியுலா எழுந்தருளினார். அதை தொடர்ந்து, நள்ளிரவு 12:00 மணிக்கு, கங்கையம்மன்வீதியுலா எழுந்தருளினார்.
இன்று, புதன்கிழமை, காலை 10:00 மணிக்கு, காந்தி சிலை அருகே, வேப்பிலை குடிலில் அம்மன் எழுந்தருளுகிறார். 2:00 மணிக்கு, கொள்ளாபுரியம்மன், கங்கையம்மனுக்கு பட்டு வஸ்திரம், மலர் மாலைகள்சாற்றப்படுகின்றன. மாலை 6:00 மணிக்கு,
கங்கையம்மனை கங்கையில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.