திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையாருக்கு (உற்சவமூர்த்தி) சிறப்பு மஹா அபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையாருக்கு (உற்சவமூர்த்தி) 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. மஹா அபிஷேகத்தில்108 லிட்டர் தேன், மற்றும் 108 லிட்டர் நெய், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகை அபிஷேகங்களும், பல்வேறு வகை மூலிகை பொடி அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.