பதிவு செய்த நாள்
26
மே
2017
12:05
ஆத்தூர்: குதிரையை அலங்கரித்து, அம்மனுக்கு சக்தி அழைக்கும் விழா நடந்தது. வாழப்பாடி, செல்லியம்மன் நகரில் உள்ள செல்லியம்மன் கோவிலில், மே, 23ல் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு குதிரையை அலங்கரித்து, செல்லியம்மன் சுவாமியாக கருதி, முன்னோர் வழக்கப்படி, மாரியம்மன் கோவிலில் இருந்து, செல்லியம்மனுக்கு சக்தி அழைத்து சென்றனர். பழங்கால வழிபாட்டு முறையை கைவிடாமல், சக்தி அழைத்து சென்ற நிகழ்ச்சியில், குதிரையை ஏராளமான பக்தர்கள் வணங்கினர். நேற்று, சுவாமிக்கு பொங்கல் விழா, ஆடு, கோழி பலி கொடுத்தல் ஆகியவை நடந்தது. இதில், வாழப்பாடி, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், பேளூர் சுற்றுவட்டார மக்கள் பலர், சுவாமியை வழிபட்டனர்.