பதிவு செய்த நாள்
26
மே
2017
12:05
ராமநாதபுரம்: ராமநாதபுரம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 4 ல் நடக்கவுள்ளது. ராமநாதபுரம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயில் கோபுரங்கள் புனரமைப்பு பணி செய்யப்பட்டு ஜூன் 4 ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. மே 31 ல் யாகசாலை பூஜை துவங்குகிறது. எஜமான அனுக்ஞை, புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் நடக்கிறது. ஜூன் 1 ல் விஸ்வரூபம், மஹாசாந்தி ஹோமம், யாகசாலை ஹோமங்கள் நடக்கிறது. இதனை தொடர்ந்து தினமும் யாகசாலை பூஜை நடக்கிறது. ஜூன் 4 ல் அதிகாலை 5:30 மணிக்கு நித்ய ஹோமங்கள், 6: 15 மஹா பூர்ணாகுதி, 6:45 மணிக்கு யாத்ரா தானம், தசா தானம், 7:00 கடங்கள் புறப்பாடு, 8:30 மணிக்கு மகாகும்பாபிஷேகம் கலசங்களுக்கும், பரிவார தேவதைகளுக்கும் நடக்கிறது. இதனை தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், இரவு 8:00 மணிக்கு கருட சேவையும் நடக்கவுள்ளது.