பதிவு செய்த நாள்
26
மே
2017
01:05
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், அம்மன் தேரோட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் வைகாசி மாதம், அமாவாசை மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தில் அம்மன் தேரோட்டம் நேற்று நடந்தது. அஷ்டதிக்கு பாலகர்கள் என்று அழைக்கப்படும், காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை, 6:00 மணியளவில் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். எம்.எல்.ஏ., சரஸ்வதி, கோவில் உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நகராட்சி ஆணையாளர் வேலாயுதம் ஆகியோர் தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். பாரம்பரியமாக அமாவாசை நாளன்று நள்ளிரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். இதனால், இந்த தேரோட்டத்தை பக்தர்கள் இருட்டு தேர் மற்றும் திருட்டு தேர் என அழைப்பர். கடந்த, நான்கு ஆண்டுகளாக அரசு உத்தரவால், இருளில் இழுக்கப்பட்ட அம்மன் தேர், மாலையில் இழுக்கப்பட்டு வருகிறது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.