திருச்செந்தூர் கோயில் பூஜைகளுக்குஆன்லைனில் புக் செய்யும் வசதி ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2011 10:11
தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகன் கோயில் பூஜைகளுக்கு பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் சண்முகார்ச்சனை, தங்கரதபுறப்பாடு, அஷ்டோத்திர அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுக்கும், தங்கும் விடுதிகளுக்கும், பக்தர்கள் கட்டணம் கட்டி ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி, கடந்த ஓராண்டிற்கு முன் துவங்கப்பட்டது. இந்நிலையில், பூஜைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக, இவ்வாறு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.