பதிவு செய்த நாள்
30
மே
2017
01:05
மொடக்குறிச்சி: கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக, இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், ஒரு பிரிவினர், நள்ளிரவில் கோவிலை முற்றுகையிட்டனர்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த சாவடிபாளையத்தில், சக்தி விநாயகர் மற்றும் பொட்டுசாமி கோவில் புனரமைப்பு பணிகள் நடந்தன. கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக, இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு தரப்பினர் பாதுகாப்பு கேட்டு, மொடக்குறிச்சி போலீசில் மனு கொடுத்தனர். இந்நிலையில், ஒரு தரப்பினர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை தொடர்ந்தனர். இன்னொரு தரப்பினர்
நேற்று முன்தினம் நள்ளிரவில், கோவிலுக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக, தாசில்தார் அலுவலகத்தில், நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில், ஒரு தரப்பினர் மட்டுமே வந்தனர். இதனால் ஜூன் 5ம் தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.