பதிவு செய்த நாள்
02
ஜூன்
2017
01:06
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் ரூபாய் 48.59 லட்சம் காணிக்கையாக கிடைத்தது. ராமேஸ்வரம் திருக்கோயிலில் 30 நாட்களுக்கு பிறகு சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் கல்யாண மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில் ரொக்க பணம் 48 லட்சத்து, 59 ஆயிரத்து, 178 ரூபாய் கிடைத்தது. மேலும் தங்கம் 25 கிராம், வெள்ளி 3 கிலோ 300 கிராம் காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், கோயில் அலுவலக மேலாளர் லெட்சுமிமாலா, கோயில் ஊழியர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.