திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வருடாபிேஷகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2017 01:06
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வருடாபிஷேகம் நடந்தது. கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த நட்சத்திர தினத்தன்று ஆண்டு தோறும் வருடாபிஷேகம் நடக்கிறது. விசாக கொறடு மண்டபத்தில் தங்கம், வெள்ளி குடங்கள், 16 சொம்புகளில் புனிதநீர் நிரப்பி வைத்து யாகசாலை பூஜைகள் நடந்தது. மாலை 4:00 மணிக்கு மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க் கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு சாம்பிராணி தைலம் சாத்துப்படியானது. மூலவர் கரத்திலுள்ள வேலுக்கு அபிஷேகம் முடிந்து அனைத்து மூலவர்களுக்கும் சமகாலத்தில் தீபாராதனை நடந்தது.