மேலுார், மேலுார் அருகே உறங்கான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பச்சிபட்டியில் மழை வேண்டி பொதுமக்கள் கரை முனியாண்டி கோயிலில் பொங்கல் வைத்து மஞ்சுவிரட்டு நடத்தினர். இதில் உறங்கான் பட்டி, வெள்ளலுார், கோட்ட நத்தாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வந்த காளைகளை வீரர்கள் அடக்கினர்.