திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தேரோட்டம் நடந்தது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த மே 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் பல்லக்கு, கேடகம், பூதம், கைலாசம், யானை, வெள்ளிரிஷபம், இந்திரவிமானம், குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மதியம் 3:00 மணிக்கு துவங்கியது.ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் அமர்ந்த தேரையும், சிநேகவல்லிதாயார் அமர்ந்த மற்றொரு தேரையும் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இரு தேர்களும் முக்கிய வீதிகள் வழியாக சென்று,மாலை 6:00 மணிக்கு நிலைக்கு சென்றடைந்தது.