பதிவு செய்த நாள்
08
ஜூன்
2017
02:06
தேனி: வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனை
நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முருகன் பிறந்த நாளான வைகாசி விசாகத்தை முன்னிட்டு தேனியில் பெரியகுளம் ரோட்டில் அமைந்துள்ள வேல்முருகன் கோயில், ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயில், போடி சுப்பிரமணியர் கோயில், சுருளியில் சுருளி ஆண்டர் கோயில், கோடாங்கிபட்டி தீர்த்ததொட்டி ஆறுமுக நாயனார் கோயில், பெரியகுளத்தில் பாலசுப்பிரமணியர் கோயில் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் சுவாமி வீதியுலா நடந்தது.
* கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் வைகாசி விசாக விழா கொண்டாடப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பழநி-சுருளி மலை பாதயாத்திரைக் குழுவைச் சேர்ந்த பெண்கள் பஜனைப் பாடல்கள் பாடினர். சுந்தரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குமுளி மலைப்பாதையில் உள்ள வழிவிடும் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள்
பாதயாத்திரையாக வந்தனர்.