திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2017 02:06
திருவள்ளூர் : திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், நேற்று, நம்மாழ்வார் திருமஞ்சனம் நடந்தது. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், நம்மாழ்வார் சாற்றுமுறை உற்சவம், நேற்று காலை நடந்தது. இதை முன்னிட்டு, ஆழ்வாருக்கு திருமஞ்சனமும், தொடர்ந்து வீரராகவ பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. மதியம் நம்மாழ்வாருடன் பெருமாள் நான்கு வீதி புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாள் மற்றும் நம்மாழ்வாரை வழிபட்டனர்.