திருக்கழுக்குன்றம் காளியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2017 02:06
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் காளியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ருத்ராங்கோவில் கிராமம் உள்ளது. கோடி ருத்திரர்கள் இங்கு வந்து இங்குள்ள திருக்குளத்தில் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தனர் என, நம்பப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த காளிஅம்மன் கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்தது. இக்கோவிலில், 60 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி செய்யப்பட்டது. இதையடுத்து, திருப்பணிகள் முடிந்து, காளியம்மன் சன்னதி விமானம், சக்தி விநாயகர், நவகிரக மூர்த்திகள், வரதராஜ ஜெய் ஆஞ்சநேயர், திரவுபதியம்மன் கோவில் அமைக்கப்பட்டு, இச்சன்னதிகளில் கும்பாபிஷேக வைபவம், இன்று காலை, 8:00 மணிக்கு நடைபெறுகிறது.