காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2017 06:06
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவம் ஜூன், 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும், ஒவ்வொரு வாகனத்திலும் எழுந்தருளும் பெருமாள், நான்கு ராஜவீதிகளில் பவனி வருவார். இந்த உற்சவத்தில், மூன்றாம் நாளான இன்று கருடசேவை கோலாகலமாக நடைபெற்றது. வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதிகளை வலம் வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். கருட சேவை விழாவிற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.