ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த வேம்பியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2017 12:06
ரிஷிவந்தியம்: கடம்பூர் கிராமத்தில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த வேம்பியம்மன் கோவில் உட்பட 8 கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த கடம்பூர் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேம்பியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுடன் முத்துவிநாயகர், ஓம்சக்தி கோவில்கள் புதிதாக அமைக்கப்பட்டன. மேலும் அஷ்டமாசித்திவிநாயகர், செல்வவிநாயகர், முத்துமாரியம்மன், கங்கைமாரியம்மன் உள்ளிட்ட கோவில்கள், புதுப்பிக்கப்பட்டு, கடந்த 5ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று நான்காம் கால யாக பூஜை முடித்ததும், காலை 8:00 மணியளவில் அனைத்து கோவில் கலசங்களிலும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.