பதிவு செய்த நாள்
09
ஜூன்
2017
03:06
சென்னை: ஷீரடிக்கு, பக்தி சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்தியன் ரயில்வேயும், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி.,யும் இணைந்து, பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்களுக்கும், கோவில்களுக்கும், சுற்றுலா சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றன. வரும், 26ல், மதுரையில் இருந்து சென்னை, எழும்பூர் வழியாக, ஆந்திரா மாநிலம், பண்டரிபுரம், மந்த்ராலயம் கோவில்கள் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வர, ஏழு நாட்கள் பக்தி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா ரயிலில், நபருக்கு, 6,105 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி மற்றும் செல்லும் இடங்களில் சுற்றிப் பார்க்க, வாகன வசதியும் அடங்கும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, கட்டண சலுகையும் உண்டு. மேலும் தகவலுக்கு, சென்னை, சென்ட்ரலில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., மையத்தை, 90031 40681 என்ற எண்ணிலும், தீதீதீ.டிணூஞிtஞிtணிதணூடிண்ட்.ஞிணிட் என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.