Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிணி தீர்க்கும் திருமாத்திரை ... கடன் தொல்லை நீங்கும் திருக்கண்மாலீஸ்வரர் வழிபாடு! கடன் தொல்லை நீங்கும் ...
முதல் பக்கம் » துளிகள்
நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் ஆபரணங்கள் சேரும்!
எழுத்தின் அளவு:
நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் ஆபரணங்கள் சேரும்!

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2017
05:06

தன் கணவரான சிவபெருமானை மதியாமல், தந்தை தட்சன் நடத்திய யாகத்துக்குச் சென்று, தட்சனால் அவமானப்படுத்தப்பட்ட தாட்சாயணி, பிராணத் தியாகம் செய்தாள். இதையறிந்த சிவனார், தம் அம்சமான வீரபத்திரரை அனுப்பி, தட்சனின் யாகத்தை அழித்தார். பிறகு தேவியின் திருமேனியைச் சுமந்தபடி உன்மத்த நடனம் ஆடினார். அப்போது தேவியின் திருமேனி அங்கங்கள் பூமியில் பல பாகங்களில் விழுந்து சிதறின. அந்த இடங்களே சக்தி பீடங்களாகத் திகழ்கின்றன.

பின்னர் பூமிக்கு வந்து யோகம் மேற்கொள்ளத் திருவுள்ளம் கொண்ட ஈசன், தாம் யோகம் செய்வதற்கு ஏற்ற இடத்தைப் பூமியில் தேர்வு செய்வதற்காக, தம் கழுத்தில் இருந்த நாகத்தை அனுப்பினார். நாகம் அடையாளம் காட்டிய ஐந்து இடங்களில் முதலாவது தலம் காளஹஸ்தி. இரண்டாவது தலம் காட்டாங் குளத்தூர். மற்றவை திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய தலங்கள் என்கின்றன ஞானநூல்கள்.

நாகம் அடையாளம் காட்டிய தலங்களில் ஒன்றான காட்டாங்குளத்தூரில் ஐயன் காளத்தீஸ்வரர் என்னும் திருப்பெயருடனும், அம்பிகை ஞானாம்பிகையாகவும் அருளும் கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பாக, பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. தெற்குநோக்கி அமைந்திருக்கும் இந்த கோயிலில் ஐயன் கிழக்கு நோக்கி அருள்கிறார். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி  சுயம்பு வாகத் தோன்றியதாகவும், மகரிஷி அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இங்கு அருளும் ஈசன் சுயம்பு மூர்த்தம் என்பதாலும், அதிக சக்தி கொண்டவர் என்பதாலும், இந்தப் பெருமானை நந்திதேவர் நேராகப் பார்த்து வழிபடாமல், சுவரில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாகத் தரிசித்து வழிபடுகிறார். இந்த நந்திதேவர் ஆபரண நந்தி என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறார். நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் ஆபரணங்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருவண்ணாமலை தலத்தில் அருணாசலேஸ்வரரை வழிபட்டுத் திரும்பிய ராகுவும் கேதுவும் ஓர் இரவு இங்கே தங்கி ஈசனை வழிபட்டதாக ஐதீகம். அதற்கேற்ப இந்தக் கோயிலில் ராகுவும், கேதுவும் ஒருவர் பின் ஒருவர் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். மேலும் நவகிரகங்கள் ஒரே இடத்தில் இல்லாமல் தனித்தனியாக அமைந்திருப்பது சிறப்பம்சம்.

தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி அருளும் ஞானாம்பிகை சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள். கோயிலை வலம் வரும்போது, வலம்புரி விநாயகர், குரு பகவான், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மன், சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்கை, ஆகியோரைத் தரிசிக்கலாம். பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி போன்ற தினங்கள் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. சித்ரா பவுர்ணமி நாளில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ராகு- கேது, குரு, சனிப் பெயர்ச்சிகளின் போது சிறப்புப் பரிகாரப் பூஜைகள் நடைபெறுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கூடுவாஞ்சேரி- பொத்தேரிக்கு அடுத்துள்ளது. காட்டாங்குளத்தூர், இங்குள்ள ரயில் அல்லது பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் போதும். நடந்து செல்லும் தொலைவிலேயே அமைந்துள்ளது. காளத்தீஸ்வரர் கோயில். இங்கு, சனிக்கிழமைதோறும் நிகழும் சர்ப்பதோஷ நிவர்த்தி பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால் சர்ப்பதோஷங்கள் நீங்கும். அதேபோல் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜை வைபவத்தைத் தரிசிக்க, குழந்தை வரம் வாய்க்கும் என்பது நம்பிக்கை.

 
மேலும் துளிகள் »
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
ஏரியினுள் 1,500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அனந்த பத்மநாபர். சிக்கபல் லாபூர் ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இருப்பினும், அம்மனை நினைத்து மனம் உருக வேண்டினால், நிமிடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar