பதிவு செய்த நாள்
12
ஜூன்
2017
04:06
கோவை: ஷீரடி சாய்பாபா பயன்படுத்திய பாதுகை, பக்தர்களின் தரிசனத்துக்காக, கோவை கொண்டு வரப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் உள்ள சாய்பாபா சமாதியில், அவர் பயன்படுத்திய பொருட்கள், பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய பாதுகை, ஷீரடியில் உள்ளது. அதை, பக்தர்கள் தரிசனத்துக்காக, கோவை கொண்டுவந்தனர். பாபாவுக்கு சிறப்பு பூஜை, விளக்கு பூஜை, சமண மஞ்சரி எனும் பாராயணம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள், பாபா பாதுகை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.