தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா முடிந்தபின் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமை, கோயில் நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். திருவிழாவிற்கான சிறப்பு உண்டியலில் 12.70 லட்சம் ரூபாய், கோயில் உண்டியலில் 22.94 லட்சம் ரூபாய் என மொத்தம் 35.64லட்சம் ரூபாய் சேர்ந்தது. 98 கிராம் தங்கம், 750 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.வறட்சியால் கடந்த ஆண்டை விட 1.50 லட்சம் ரூபாய் வருவாய் குறைந்துள்ளது.