கீழக்கரை: குதக்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், லெட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், பூர்ணாகுதி தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது. காலை 10:30 மணியளவில் கடம் புறப்பட்டு, கோயில் விமானக்கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. காளியம்மன், கருப்பண்ணசாமி, மதுரைவீரன், ஆஞ்சனேயர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல் 12:00 மணியளவில் அன்னதானம் நடந்தது.