Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மறைமலைநகர் மாரியம்மன் கோவிலில் உலக ... திருத்தணி கங்கையம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்யாண வெங்கடேச பெருமாள் தேரில் பவனி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2017
01:06

நாராயணவனம் : திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உபகோவிலான, கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம்,  நேற்று, கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Default Image
Next News

நகரி அடுத்த, நாராயணவனம் கிராமத்தில் அமைந்துள்ளது, பத்மாவதி உடனுறை கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில். பத்மாவதி தாயாரை, பெருமாள் திருக்கல்யாணம் செய்த தலம் என்ற சிறப்பு வாய்ந்தது இந்த தலம். கோவிலில், சுவாமியின் திருக்கல்யாண மேடை மற்றும் கல்யாண விருந்திற்கு மாவு அரைத்த இயந்திர கல், இன்றும், பக்தர்களின் தரிசனத்திற்கு காண கிடைப்பது பெரும் பாக்கியம். சிறப்பான இந்த கோவிலின் பிரம்மோற்சவம் கடந்த 6ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.  தினசரி காலை, மாலை அன்னம், நாகம், கற்பகதரு, சந்திரன் சூரிய பிரபை, சிம்மம் என, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா  எழுந்தருளினார். கருட சேவை, கடந்த சனிக்கிழமை இரவு நடந்தது.

நேற்று, காலை 8:30 மணிக்கு, தேரில் பெருமாள் பவனி புறப்பட்டார். திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷம் விண்ணை பிளந்தது. தேரோட்டத்தின் போது, கேரள செண்டை மேளம், கரகாட்டம், கோலாட்டம் என, பக்தி குழுவினரின் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.மாடவீதியில், பக்தர்களின் தாகம் தணிக்க மோர் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டன. மாலை 4:00 மணிக்கு, தேர் நிலையை வந்தடைந்தது. இன்று காலை, கோவில் புஷ்கரணியில் சக்கரஸ்தானம்  நடக்கிறது. இன்றுடன், பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.அருகம்பாளையத்தில், ... மேலும்
 
temple news
 சென்னை: கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருநட்சத்திர நாளை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு, 1,008 ... மேலும்
 
temple news
பழநி: பழநி ரெணகாளிஅம்மன் கோயில் ஏப்.30 கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்த கால் ... மேலும்
 
temple news
 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை என்பதால், சுட்டெரிக்கும் வெயிலிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar