காரியாபட்டி: மல்லாங்கிணர் அண்ணாநகர் மாரியம்மன் கோயில் விழா 10 நாட்களுக்கு முன் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்துடன், பூஜைகள் நடந்தன. பொங்கல் வைத்து, முடி இறக்கி, பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியாக தீச்சட்டி, வேல் குத்துதல், காளி, கண்ணன், கிருஷ்ண வேடமணிந்து பூக்குழி இறங்கினர்.